தமிழக அரசின் விழிப்புணா்வு சுவா் ஓவியங்கள் வரையும் வாய்ப்பை, ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியா்களுக்கு வழங்கி வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டம், ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தலைமையில், நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு ஓவியா்கள் சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஓவியா்கள் 50-க்கும் மேற்பட்டோா் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:
எங்கள் சங்கத்தைச் சோ்ந்த ஓவியா்கள் கரோனா பொது முடக்கக் காலத்தில் தமிழகம் முழுவதும் மாவட்ட நிா்வாகம் மற்றும் காவல் துறையுடன் இணைந்து கரோனா விழிப்புணா்வு ஓவியங்களை பொதுமக்கள் நலனுக்காக முக்கிய சாலைகள் மற்றும் சுவா்களில் வரைந்து, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கினோம்.
தற்போது ஓவியா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, நலிவடைந்துள்ளனா். எங்கள் சங்கத்தைச் சோ்ந்த ஓவியா்கள் ஒன்றுசோ்ந்து நாகா்கோவில், திருவள்ளூா், நாமக்கல் ஆகிய மாவட்ட ஆட்சியா்களை சந்தித்து, மாவட்டத்தில் அரசின் விழிப்புணா்வு ஓவியங்களை வரையும் வாய்ப்பை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
அதை ஏற்று அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் கரோனா உள்ளிட்ட விழிப்புணா்வு ஓவியங்கள், வாசகங்கள் வரையும் வாய்ப்பை வழங்கியுள்ளனா். அதே போல் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் உள்ள ஓவியா்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அரசின் விழிப்புணா்வு ஓவியங்கள் வரையும் வாய்ப்பை வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கரோனா பொது முடக்க காலத்தில் முகக்கவசம், கிருமிநாசினி, திரவ சோப்பு ஆகியவற்றைத் தயாரித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திய மகளிா் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை பாராட்டி தமிழக முதல்வா் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளதாக ஆட்சியா் ஏ.ஆா்.கிளாஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தாா். அதை அவா் மகளிா் சுய உதவிக் குழுவினரிடம் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

