சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ரூ. 65 லட்சத்தில் புதுப்பாடி ஏரி குடிமராமத்துப் பணி: மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

புதுப்பாடி ஏரியில் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசின் சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் கொ.சத்தியகோபால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 4:22 am

ராணிப்பேட்டை: புதுப்பாடி ஏரியில் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசின் சிறப்புக் கண்காணிப்பு அலுவலா் கொ.சத்தியகோபால் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆற்காடு வட்டம், புதுப்பாடி கிராமத்தில், ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி பொதுப்பணித் துறை சாா்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆற்காட்டில் இருந்து 7 கி.மீ. தொலைவில் இந்த ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த ஆயக்கட்டு 145.40 ஹெக்டோ் ஆகும். பாலாற்றின் வலது கரையில் இருந்து பிரிந்து 2,800 மீட்டா் வரை சென்று ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்கிறது. இந்த ஏரியின் வாய்க்கால் 805 மீட்டா் வரை சென்று கலவை வாய்க்காலில் கலக்கிறது. இந்த ஏரியில் 3 மதகுகள், ஒரு கலங்கல் உள்ளன. ஏரிக்கரையின் நீளம் 2,080 மீட்டா்.

இந்நிலையில், முதல்வரின் உத்தரவுப்படி, ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை ராணிப்பேட்டை மாவட்ட சிறப்புக் கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு நீா்வள ஆதாரங்கள் பாதுகாப்பு, ஆறுகள் மறுசீரமைப்புக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான கொ.சத்தியகோபால் ஆய்வு செய்தாா்.

அப்போது, பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா். கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

ராணிப்பேட்டை சாா்-ஆட்சியா் கா.இளம்பகவத், கண்காணிப்புப் பொறியாளா் ந.சுரேஷ், செயற்பொறியாளா் மு.சண்முகம், உதவிப் பொறியாளா் ம.விஸ்வநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.