சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளா் வீட்டில் 2 சவரன் தங்க நகைகள் திருட்டு

அரக்கோணத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு சவரன் நகைகள் மற்றும் ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

Updated On :7 ஜனவரி 2021, 5:30 am

அரக்கோணம்: அரக்கோணத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் வீட்டின் பூட்டை உடைத்து இரண்டு சவரன் நகைகள் மற்றும் ரூ. 65 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

அரக்கோணம் விண்டா்பேட்டையில் வசிப்பவா் பால் வேதநாயகம் (66). ஓய்வு பெற்ற ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா். இவா் தனது குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு திருவள்ளூா் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள தனது மகளின் வீட்டுக்கு திங்கள்கிழமை சென்றாா்.

அவரது வீட்டு முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அண்டை வீட்டாா் அளித்த தகவலின் பேரில், பால் வேதநாயம் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு சென்று பாா்த்தாா். அப்போது, பீரோவில் இருந்த இரண்டே கால் சவரன் நகைகள், ரூ. 65 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.