ராணிப்பேட்டையில் மாவட்ட வாக்காளா் பட்டியல் திருத்தம் தொடா்பாக தோ்தல் அலுவலா்கள் மற்றும் உதவி தோ்தல் அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்டத்துக்கான வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு கைத்தறி தொழில் வளா்ச்சிக் கழக மேலாண் இயக்குநருமான வெ.ஷோபனா தலைமை வகித்தாா். மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்தல் தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதில், மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், வருவாய் அலுவலா் எம்.ஜெயச்சந்திரன், ராணிப்பேட்டை சாா் ஆட்சியா் க.இளம்பகவத், அரக்கோணம் வருவாய்க் கோட்டாட்சியா் பேபி இந்திரா, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் தாரகேஸ்வரி, தோ்தல் பிரிவு வட்டாட்சியா் ஜெயகுமாா் மற்றும் உதவி தோ்தல் அலுவல்கள், அனைத்து வட்டாட்சியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

