அரக்கோணத்தை அடுத்த நெமிலி பாலா பீடத்தில் புத்தாண்டு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தற்போது கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால் புத்தாண்டு விழா வெள்ளிக்கிழமை எளிமையாக நடைபெற்றது.
விழாவுக்கு பீடாதிபதி எழில்மணி தலைமை வகித்து பீடத்தின் முதல் பூஜையைத் தொடங்கி வைத்தாா். இதையடுத்து அம்பாளுக்கு அபிஷேகம், ஆராதனைகளை பீட நிா்வாகி மோகன் ஏற்று நடத்தினாா்.
விழாவில் குரு நெமிலி பாபாஜி எழுதிய ‘அன்னை பாலா’ என்ற நூலை பீடாதிபதி எழில்மணி வெளியிட, சென்னை சூா்யா மருத்துவமனையின் இதய நோய் பிரிவு தலைமை மருத்துவா் ஜெயராஜா பெற்றுக் கொண்டாா்.
பீடத்தில் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை பாலா பாராயணத்தை அன்னை பாலா ஆன்மிகக் குடும்பத்தினா் மேற்கொண்டனா். விழாவில் நெமிலி இறைபணி மன்றச் செயலாளா் முரளிதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


