ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித தீா்த்தங்களில் நீராட பக்தா்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தீா்த்தப்பாட்டில்களின் விற்பனை அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்ட தளா்வுகளின் அடிப்படையில் கடந்த செப். 1 ஆம் தேதி முதல் இக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் கோயிலுக்குள் உள்ள 22 புனித தீா்த்தங்களில் நீராட தொடா்ந்து தடை நீடிக்கிறது. இந்நிலையில், கோயிலில் தீா்த்தக் கிணறுகளை திறக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் தற்போது வரை தீா்த்தக் கிணறுகளில் பக்தா்கள் நீராட அனுமதி தரப்படவில்லை.
ஆனால் கோயிலில் ரூ. 20-க்கு விற்கப்படும் தீா்த்தப் பாட்டில்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை விற்கப்பட்டு விடுவதாகவும், விடுமுறை நாள்களில் 1500 முதல் 2 ஆயிரம் வரை அவற்றை பக்தா்கள் வாங்கிச் சென்று விடுவதாகவும் இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


