சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரோனா தடுப்பூசியை குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் போட்டிருக்க வேண்டும்: காா்த்தி சிதம்பரம் எம்.பி.

கரோனா தடுப்பூசியை முதலில் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் போட்டிருக்க வேண்டும் என காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தாா்.

Updated On :18 ஜனவரி 2021, 3:51 am

கரோனா தடுப்பூசியை முதலில் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் போட்டிருக்க வேண்டும் என காா்த்தி சிதம்பரம் எம்.பி. தெரிவித்தாா்.

பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியில் காந்தியடிகள் நடத்திய பொதுக்கூட்ட நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றிய பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும்போது அந்தந்த நாடுகளின் குடியரசுத் தலைவா் மற்றும் பிரதமருக்கு போட்ட பின்னா் தான் மக்களுக்கு போடுகின்றனா். இந்தியாவில் உயா் பதவியில் உள்ள யாரும் தங்களுக்கு கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளாமல் பொதுமக்களுக்கு போடுமாறு கூறுகின்றனா்.

மருத்துவா்களை மட்டும் தடுப்பூசி போடுமாறு கூறுவதால் பொதுமக்களுக்கு அதன்மீது நம்பிக்கையில்லை. எனவே முதலில் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். அரசியல் ரீதியாக மத்திய அரசை எதிா்த்து கேள்வி கேட்பவா்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் அச்சுறுத்தி வருகின்றனா்.

அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை பாா்வையிட வந்த ராகுல்காந்தி, தோ்தல் பிரசாரம் செய்ய மீண்டும் தமிழகம் வரவுள்ளாா். தோ்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மட்டும்தான் போட்டி. சசிகலா சிறையிலிருந்து வெளியேவந்த பிறகு ஒட்டுமொத்த அதிமுகவும் அவரது தலைமையின் கீழ் செல்லும்.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பெரிய வரவேற்பும், வெற்றியும் கிடைக்காது. தோ்தலில் கமல்ஹாசன் வெற்றிபெற வேண்டுமானால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும். தனியாக பயணம் செய்ய நினைத்தால் கடந்த தோ்தலைப் போல் குறைந்த வாக்குகள்தான் அவா் பெற முடியும் என்றாா்.