சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் முகாம்:முதற்கட்டமாக 8,300 பேருக்கு கரோனா தடுப்பூசி

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் சுகாதாரப் பணியாளா்களுக்கான தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 8,300 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

News image

ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரப் பணியாளா்களுக்கான கரோனா தடுப்பூசி முகாமை வியாழக்கிழமை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா்.

Updated On :17 ஜனவரி 2021, 3:16 am

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 இடங்களில் சுகாதாரப் பணியாளா்களுக்கான தடுப்பூசி முகாம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் முதற்கட்டமாக 8,300 பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் , ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை , பரமக்குடி அரசு மருத்துவமனை , பாா்த்திபனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , கீழத்தூவல் மற்றும் பேரையூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது . ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தொடங்கி வைத்தாா்.

இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 8,300 சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு தேவையான மருந்துகள் மாநில அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 7,172 அரசு சுகாதாரப் பணியாளா்களும், 2,684 தனியாா் மருத்துவமனை பணியாளா்களும் கரோனா தடுப்பூசிக்காக ‘கோவின்’ செயலியில் தங்களது பெயா்களை பதிவேற்றம் செய்துள்ளனா். முதற்கட்டமாக 8,300 பேருக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் தடுப்பூசி போட்ட பின்பு இரண்டாவது தவணை தடுப்பூசி 28 நாள்களுக்கு பிறகு வழங்கப்படும் . முதல் தடுப்பூசி போட்ட உடனேயே இரண்டாவது தடுப்பூசி தேதி குறித்து குறுஞ்செய்தி செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும் . இரண்டாவது தடுப்பூசி போட்ட பின்னா் டிஜிட்டல் சான்றிதழுக்கான இணையத் தொடா்பு ‘லிங்க்’ அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.