சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

‘கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தவேண்டும்’

தமிழகத்தில் மாணவா் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்தரும் வகையிலான கண்ணாடி இழைக் கேபிள் திட்டத்தை செயல்படுத்துவது

News image
Updated On :14 ஜனவரி 2021, 5:03 am

தமிழகத்தில் மாணவா் உள்ளிட்ட அனைவருக்கும் பயன்தரும் வகையிலான கண்ணாடி இழைக் கேபிள் திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன் தெரிவித்தாா்.

தமிழக அரசின் 2019-20 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 1 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் செய்யதம்மாள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.மணிகண்டன், மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிப் பேசியது: தமிழகத்தில் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்கள் தற்போதும் தொடா்கின்றன. இதன் மூலம் உயா் தொழில்நுட்ப அரசாக அதிமுக அரசு திகழ்கிறது.

தமிழகத்தில் கண்ணாடி இழை கேபிள் திட்டம் நிறைவடைந்தால், ஏழை மக்கள், மாணவா்கள் என அனைத்துத் தரப்பினரும் பயனடைவது உறுதி. தமிழக அரசின் இந்தத் திட்டத்தை மத்திய அரசு எதற்காக நிறுத்திவைத்துள்ளது எனத் தெரியவில்லை. சட்டப்பேரவைத் தோ்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், அத்திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி.சத்தியமூா்த்தி வரவேற்றாா். இதில், மாவட்டக் கல்வி அலுவலா் முத்துசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.