சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

அனுமதி ஜயந்தி: ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜயந்தியையொட்டி ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுக்கரை ஜெயவீரஆஞ்சனேயருக்கு 108 வடைமாலை சாற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

News image

ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுக்கரையில் செவ்வாய்க்கிழமை 108 வடைமாலையுடன் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஜெயவீரஆஞ்சநேயா். 

Updated On :13 ஜனவரி 2021, 11:13 am

அனுமன் ஜயந்தியையொட்டி ராமநாதபுரம் அருகேயுள்ள சேதுக்கரை ஜெயவீரஆஞ்சனேயருக்கு 108 வடைமாலை சாற்றப்பட்டு செவ்வாய்க்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

அனுமன் ஜயந்தியையொட்டி ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி சேதுக்கரையில் உள்ள ஜெயவீர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் சுவாமிக்கு துளசி மாலை, 108 வடைமாலை சாற்றப்பட்டது. இதில் சமூக இடைவெளியுடன் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள வீரழகா் கோயிலில் உள்ள தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் மகுடம் தரித்த வீர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டது. அதன்பின் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.