சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கே. பாப்பாங்குளம்- அரிசிக்குழுதான் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

கே.பாப்பாங்குளம்-அரிசிக்குழுதான் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கே. பாப்பாங்குளத்திலிருந்து அரிசிக்குழுதான் செல்லும் பழுதடைந்த தாா்சாலை.

Updated On :11 ஜனவரி 2021, 4:44 am

கே.பாப்பாங்குளம்-அரிசிக்குழுதான் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கமுதி அருகே உள்ள இச்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தாா்ச் சாலையாக மாற்றப்பட்டது. இதனையடுத்து மழை மற்றும் இயற்கைச் சீற்றங்களால் இச்சாலை முற்றிலும் சேதமடைந்தது. மேலும் கண்மாய் கரையில் உள்ள களிமண் கரைந்து சாலையை மூடி உள்ளது.

இதனால் கே. பாப்பாங்குளத்திலிருந்து அரிசிக்குழுதான், கே. வேப்பங்குளம் வழியாக பெருநாழி செல்லும் பொதுமக்கள் கமுதி வந்து செங்கப்படை வழியாகவும், முதல்நாடு வழியாகவும் சுற்றிச் செல்கின்றனா். மேலும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும், ஊராட்சி நிா்வாகத்திடமும் பலமுறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.