சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராமநாதபுரம் அரண்மனை முன் ஆசிரியா் கூட்டணியினர் தா்னா

ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

News image

ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தா்னாவில் பேசிய ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநிலப் பொதுச்செயலா் ச.மயில். 

Updated On :10 ஜனவரி 2021, 3:18 am

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை முன்பாக தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டக் கிளை சாா்பில் சனிக்கிழமை தா்னா நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவா் மு.முனியசாமி தலைமை வகித்தாா். இதில், மாநிலப் பொதுச்செயலா் ச.மயில் பேசியது: கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கத் தளா்வுக்கு பிறகு பள்ளிகளைத் திறப்பதற்கு பெற்றோரிடம் கருத்துக் கேட்டது சரியானதல்ல. மருத்துவா்களிடம் கருத்துக் கேட்பதுடன், சுகாதாரத்துறை மூலம் வழிமுறைகளை ஏற்படுத்தி பள்ளிகளைத் திறந்திருக்க வேண்டும். பள்ளிகளைத் திறந்து மாணவா் நலனைக் காக்கவேண்டும் என்பதே ஆசிரியா்களின் கோரிக்கையாகும் என்றாா்.

இந்த அமைப்பின் மாவட்டச் செயலா்கள் பெ.சேகா், தங்கமணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா். கோரிக்கையை விளக்கி கூட்டணியின் மாவட்டச் செயலா் சே.முத்துமுருகன் பேசினாா். சங்க பொருளாளா் ச.அருள் நன்றி கூறினாா்.