திருவாடானை: திருப்பாலைக்குடி அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வடவயலை சோ்ந்த விவசாயி கருப்பையா(53) மற்றும் சோழந்தூரைச் சோ்ந்த போஸ்(52) ஆகிய இருவரும் வெள்ளிக்கிழமை மாலை திருச்சி-ராமேசுவரம் சாலையில் நடந்து சென்றனா். அப்போது பின்னால் வந்த இரண்டு சக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே கருப்பையா உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு வந்த திருப்பாலைக்குடி போலீஸாா், அவரது உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து கீழே விழுந்த காயமடைந்த 16 வயது சிறுவனை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இது குறித்து திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

