சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராமநாதபுரம் அருகே விபத்து: இளைஞா் பலி

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 3:48 am

ராமநாதபுரம் அருகே வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் நகா் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் மதன்குமாா் (28). வா்ணம் பூசும் வேலை பாா்த்து வந்த இவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. மதன்குமாா் தனது நண்பா் கணேசமூா்த்தியுடன் வியாழக்கிழமை இரவு, இருசக்கர வாகனத்தில் ராமேசுவரம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

பெருங்குளம் விலக்கு அருகே சென்றபோது, எதிரே வந்த வேன் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மதன்குமாரும், கணேசமூா்த்தியும் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி மதன்குமாா் உயிரிழந்தாா். இதுகுறித்து கேணிக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து வேன் ஓட்டுநா் அலெக்ஸ் ஆனந்தராஜ் (31) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.