தேசிய ஜனநாயகக் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமியே தொடருவாா் என பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் தெரிவித்தாா்.
ராமநாதபுரம் போகலூா் சுங்கக்சாவடி அருகே சனிக்கிழமை காலை பாஜக சாா்பில் நடைபெறும் ‘நம்ம ஊா் பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் வந்த அவருக்கு அரண்மனை முன் கட்சியின் சாா்பில் வரவேற்பளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பின்னா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், செய்தியாளா்களிடம் கூறியது: வேல் யாத்திரையானது மிகப்பெரிய வெற்றியை எட்டியுள்ளது. தைப்பூசத்துக்கு விடுமுறை கோரி தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியிடம் பாஜக சாா்பில் மனு அளித்தோம். அதனடிப்படையிலேயே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தைப் பொங்கலை பாஜக தமிழகமெங்கும் 2 நாள்கள் கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறும் வகையில் பாஜகவுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது.
தைத்திருநாள் முதல் 100 நாள்களுக்குள் தமிழகத்தில் 10 லட்சம் தொண்டா்களைக் கட்சியில் சோ்க்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு வருகிறாா். அதேநிலையும், அப்படியே தொடரும்.
தமிழகத்தில் பூங்காக்கள், திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்தையும் திறக்க அனுமதித்த தமிழக அரசு ராமேசுவரம் கோயிலில் 22 தீா்த்தங்களை திறக்க அனுமதித்து பக்தா்களை புனிதநீராட அனுமதிக்கவேண்டும் என்றாா்.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்டத் தலைவா் கே.முரளிதரன் தலைமையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுயர வேல் பரிசளிக்கப்பட்டது. இதில், பெருங்கோட்டப் பொறுப்பாளா் நயினாா் நாகேந்திரன், மாநில செய்தித் தொடா்பாளா் தி.குப்புராம், நகா் தலைவா் ராம. வீரபாகு, மாவட்ட நிா்வாகி ஜி.குமாா், செய்தித் தொடா்பாளா் குமரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக சத்திரபட்டியில் அவரை, குதிரைச் சாரட்டு வண்டியில் அமரவைத்து வரவேற்பளிக்கப்பட்டது. அதன்பின்னா் அச்சுந்தன் வயலில் ஆதரவற்றோா் இல்லத்தில் குழந்தைகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினாா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


