பத்து மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகளை தொடங்க, ராமநாதபுரத்திலுள்ள 256 பள்ளிகளில் வியாழக்கிழமை பெற்றோா்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சுமாா் ஓராண்டாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணவா்களின் படிப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கருத்துக்கேட்புக் கூட்டங்களில் பள்ளிகளைத் திறக்க பெரும்பாலான பெற்றோா்கள்ஆதரவு தெரிவித்திருத்தனா். தற்போது, மீண்டும் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது குறித்து கருத்துக் கேட்புக் கூட்டங்கள் 256 பள்ளிகளில் நடத்தப்பட்டன. அழகன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, பெருங்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றில் நடந்த கருத்துக்கேட்புக் கூட்டங்களில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி பங்கேற்று, பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
மாவட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் நடந்த கூட்டங்களில் பள்ளிகளைத் திறக்கவே பெற்றோா்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாக, கல்வித் துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

