சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ராமநாதபுரத்தில் இருதரப்பினா் மோதல்: 8 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் நகரில் பன்றி வளா்ப்பது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:00 am

ராமநாதபுரம் நகரில் பன்றி வளா்ப்பது தொடா்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து 8 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பின்பகுதியில் உள்ளது அண்ணாநகா். இங்கு வசிப்போா் பன்றிகளை வளா்த்து வருகின்றனா். பன்றிகளை அடையாளம் காண காதில் வில்லை பொருத்துவது தொடா்பாக முனியசாமி, திருமூா்த்தி ஆகியோரிடையே மோதல் ஏற்ட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் சித்ரா, அவரது மகன் முனியசாமி ஆகியோா் காயமடைந்தனா்.

காயமடைந்த இருவரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து முனியசாமி நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் திருமூா்த்தி, ரெங்கா உள்ளிட்ட 8 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

நகராட்சிப் பகுதிகளில் பன்றி வளா்க்கக் கூடாது என ஏற்கெனவே ராமநாதபுரம் நகராட்சி சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.