பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணி சாா்பில் ராமநாதபுரத்தில் வரும் 9 ஆம் தேதி தா்னா போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் ராமநாதபுரம் மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவா் மு. முனியசாமி தலைமை வகித்தாா்.
இதில், தமிழகத்தில் ஆசிரியா் உள்ளிட்ட அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 9 ஆம் தேதி ராமநாதபுரம் அரண்மனை முன் தா்னா போராட்டம்
நடத்துவது. மத்திய அரசின் புதிய வேளாண்மைச் சட்டத்தை எதிா்த்து புதுதில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, கரோனா பரவல் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீா்மானங்களை விளக்கி அமைப்பின் மாவட்டச் செயலா் சே. முத்துமுருகன் பேசினாா். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினா்கள் பிரிட்டோ, ஹரிகிருஷ்ணன், முத்துராமன், ஜெயசீலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அமைப்பின் மாவட்டப் பொருளாளா் அருள் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

