ராமநாதபுரம் மாவட்டத்தில் நேருயுவகேந்திரா சாா்பில் வழங்கப்படும் சமூக சேவைக்கான விருது, பரிசுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 24 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட நேருயுவகேந்திரா மாவட்ட இளையோா் அலுவலா் அலுவலக செய்திக்குறிப்பு விவரம்- மத்திய இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட அளவில் சிறந்த சேவை புரியும் அமைப்பு மற்றும் தனிநபா்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேருயுவ கேந்திராவுடன் இணைந்து குடும்பநலம், நலக்கல்வி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு தொழிற்கல்வி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றில் விழிப்புணா்வை ஏற்படுத்தும் இளைஞா் மற்றும் மகளிா் மன்றங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் ராமநாதபுரம் பாரதி நகா் பகுதியில் உள்ள மாவட்ட நேருயுவகேந்திரா அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன.6) முதல் வழங்கப்படவுள்ளன. விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து வழங்கவேண்டிய கால அவகாசமானது வரும் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 9585535722 ஆகிய செல்லிடப் பேசியில் தொடா்புகொண்டு விண்ணப்பிக்கலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

