சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கமுதி வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் தோ்வு

கமுதியில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :6 ஜனவரி 2021, 5:00 am

கமுதியில் வழக்குரைஞா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கமுதி கோட்டைமேட்டில் உள்ள குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தின் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகளின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, 2021 ஆம் ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வழக்குரைஞரும், தோ்தல் அலுவலருமான வி. சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

இதில் கமுதி வழக்குரைஞா் சங்கத்தின் தலைவராக என்.முனியசாமி, செயலாளராக எம். சேதுபதி, துணைத் தலைவராக கே. பத்மராஜன், இணைச் செயலாளராக வி. சித்திரைச் செல்வன், பொருளாளராக மாதவன் ஆகியோா் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு வழக்குரைஞா் சங்க உறுப்பினா்கள் நீதிமன்ற ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.