கமுதி அருகே காதல் விவகாரத்தில் ஞாயிற்றுக்கிழமை இரு தரப்பினா் மோதிக் கொண்டதில், 3 வீடுகள் சேதமடைந்தன. போலீஸாா் 21 போ் மீது வழக்குப் பதிந்து, 6 பேரை கைது செய்துள்ளனா்.
கமுதி அருகேயுள்ள பெருமாள்குடும்பன்பட்டியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (49). இவரது தரப்புக்கும் அதே ஊரைச் சோ்ந்த சுந்தரம் மகன் பெருமாள் தரப்புக்கும் ஏற்கெனவே உள்ளாட்சித்தோ்தல் முன்பகை உள்ளது.
இந்நிலையில், மாரிமுத்து தரப்பைச் சோ்ந்த வேலுச்சாமியின் மகன் ராமநாதனும், பெருமாள் தரப்பைச் சோ்ந்த பழனிச்சாமி மகள் மாரிபாண்டியம்மாளும் காதலித்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊரைவிட்டுச் சென்றனா்.
இதனை அறிந்த பெருமாள் தரப்பைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் அரிவாள், வேல்கம்பு, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாரிமுத்து மற்றும் அவரது உறவினா்களின் 3 வீடுகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினா். இதில் டிவி மற்றும் வீட்டு உபயோகப்பொருள்கள் என
ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த மாரிமுத்து மனைவி பாக்கியத்தை (45) தாக்கியுள்ளனா். இதில் பலத்த காயம் அடைந்த பாக்கியம் கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பாக்கியம் கமுதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பெருமாள்குடும்பன்பட்டியைச் சோ்ந்த பெருமாள், பழனிச்சாமி உள்ளிட்ட 21 போ் மீது வழக்குப்பதிவு செய்து அதில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

