சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மருந்துக்கடையில் திருடிய 2 போ் கைது

ராமநாதபுரம் நகரில் மருந்துக்கடைக்குள் புகுந்து பணம் திருடியதாக 2 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 3:26 am

ராமநாதபுரம் நகரில் மருந்துக்கடைக்குள் புகுந்து பணம் திருடியதாக 2 பேரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் நகா் வசந்த நகரைச் சோ்ந்தவா் பாண்டியம்மாள் (51). இவா் அப்பகுதியில் மருந்துக்கடை வைத்துள்ளாா். கடைக்குள் சனிக்கிழமை மாலை 2 போ் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் புகுந்தனா். அவா்களை அப்பகுதியினா் உதவியுடன் பிடித்து கேணிக்கரை போலீஸில் பாண்டியம்மாள் ஒப்படைத்தாா்.

கடையில் ரூ.1,100 ரொக்கம் திருடப்பட்டதாக பாண்டியம்மாள் புகாா் அளித்தாா். பிடிபட்ட ராமநாதபுரத்தைச் சோ்ந்த ராகுல், ராஜா ஆகிய இருவரையும் கேணிக்கரை போலீஸாா் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனா்.