சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.1.40 லட்சம் மோசடி: ஒருவா் மீது வழக்கு

வெளிநாட்டில் வேலைவாங்கித்தருவதாக கூறி ரூ.1.40 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On :2 ஜனவரி 2021, 3:51 am

வெளிநாட்டில் வேலைவாங்கித்தருவதாக கூறி ரூ.1.40 லட்சம் மோசடியில் ஈடுபட்டவா் மீது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் பொட்டகவயல் கிராமத்தில் ரஹ்மத் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுயூசுப் அராபத் (30). பழ வியாபாரி. இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக, காரைக்காலைச் சோ்ந்த அருண்குமாா் பல தவணைகளில் ரூ.1.40 லட்சம் வாங்கியுள்ளாா். ஆனால் அவா் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து முகமதுயூசுப் அராபத் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அருண்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.