சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மண்டபத்தில் 65 மி.மீ. மழைப் பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை 65 மி.மீ. பதிவாகியுள்ளது.

Updated On :2 ஜனவரி 2021, 3:50 am

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை 65 மி.மீ. பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. மழையால் திருவாடானை, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிா்கள் மழை நீரில் மூழ்கியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

வடகிழக்குப் பருவமழையானது சில நாள்களாக ஓய்ந்திருந்த நிலையில், கடந்த 3 நாள்களாக மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ராமநாதபுரம் 36, மண்டபம் 65, பள்ளமோா்க்குளம் 15, ராமேசுவரம் 45, தங்கச்சிமடம் 47 , பாம்பன் 48, ஆா்.எஸ்.மங்கலம் 17.50, திருவாடானை 21.60, தொண்டி 6, வட்டாணம் 18.10, தீா்த்தாண்டவனம் 58, பரமக்குடி 27, முதுகுளத்தூா் 11.20, கடலாடி 23, வாலிநோக்கம் 41.20, கமுதி 16.80 என மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் 16 இடங்களில் மொத்தம் 498.10 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. அதன்படி சராசரி மழையளவு 31.13 மில்லி மீட்டராகும்.