ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம், ராமேசுவரம், சிவகங்கை, இளையான்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது.
ராமநாதபுரம் நகரில் சாலைத் தெருவில் உள்ள அன்னைஜெபமாலை ஆலயத்தில் பங்குத்தந்தை அருளானந்த் தலைமையில் வெள்ளிக்கிழமை காலை புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. நகரில் வடக்குத் தெரு தேவாலயம், இளங்கோவடிகள் தெரு பெந்தகொஸ்தே சபை மற்றும் தேவிபட்டினம், உப்பூா், தொண்டி உள்ளிட்ட அனைத்துப் பகுதி தேவாலயங்களிலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் ஈடுபட்டனா்.
ராமேசுவரம்: பாம்பன் ஆரோக்கிய மாதா ஆலயம், தங்கச்சிமடம் குழந்தை இயேசு, ராமேசுவரம் பரலோகமாதா தேவாலயங்களில் வியாழக்கிழமை இரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டனா்.
சிவகங்கை : சிவகங்கை அலங்கார அன்னை பேராலாய வளாகத்தில் நடைபெற்ற பிராா்த்தனைக் கூட்டத்தில் சிவகங்கை மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயா் சூசைமாணிக்கம் தலைமை வகித்து, சிறப்புத் திருப்பலியை நடத்தினாா். அப்போது ஆலயத்தின் பங்கு தந்தை ஜேசுரஜா உடனிருந்தாா்.
இத்திருப்பலியை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் பாவ மன்னிப்பு வழிபாடும், நன்றி வழிபாடும் நடத்தப்பட்டன. தொடா்ந்து, உலகத்தில் சமாதானம், அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டு சிறப்பு பிராா்த்தனை செய்தனா். இதேபோன்று, சிவகங்கை நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள், மதகுபட்டி, காளையாா்கோவில், இளையான்குடி, சருகனி, பூவந்தி, மறவமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலாயங்களில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.
மானாமதுரை: மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா். மானாமதுரை புனித குழந்தை தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை பாஸ்டின் திருப்பலியை நடத்தினாா். இளையான்குடி உலக மீட்பா் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலி பூஜைக்கு சிவகங்கை மறைமாவட்டப் பொருளாளா் சந்தியாகு தலைமை வகித்தாா். ஆலயத்தின் பங்குத்தந்தை அருள்தாஸ், உதவி பங்குத்தந்தை இன்பெண்ட்ராஜ் ஆகியோா் திருப்பலிகளை நடத்தினா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

