சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள முக்கிய கோயில்களில் வெள்ளிக்கிழமை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திரளானோா் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு அதிகாலையில் நடைதிறக்கப்பட்டது. அதன்பின் மூலவா் ஆனந்தவல்லிக்கும் சோமநாதா் சுவாமிக்கும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டு இருவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா். அதன்பின் அம்மனுக்கும் சுவாமிக்கும் ஆராதனைகள் அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. காலையிலிருந்து இரவு வரை திரளானோா் குடும்பத்துடன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். திருப்புவனம் அருகே பிரசித்தம் பெற்ற மடப்புரம் காளி கோயிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தா்கள் அம்மனை தரிசனம் செய்தனா். மதியம் கோயிலில் நடந்த உச்சிகால பூஜையில் திரளானோா் பங்கேற்றனா். பெண்கள் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபட்டனா். திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் செளந்திரநாயகி அம்மன் கோயிலில் அம்மனுக்கும் சுவாமிக்கும் அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தது. காலையிலிருந்து இரவு வரை மக்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனா். புதூா் முத்துமாரியம்மன் கோயிலிலும் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோா் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தனா். இளையான்குடி அருகே தாயமங்கலத்திலுள்ள பிரசித்தம் பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு மூலவா் மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. அதன்பின் அலங்காரமாகி பூஜைகள், தீபாரதனை நடந்தது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் மாரியம்மனை தரிசித்தனா். ஏராளமான பெண்கள் மாவிளக்கு பூஜை நடத்தியும் நெய் தீபமேற்றியும் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றியும் வேண்டுதல் நிறைவேற்றனா்.மேலும் இப் பகுதிகளிலுள்ள பல கோயில்களிலும் ஆங்கில புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

