ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலாயங்கள், பெருமாள் கோயில்கள், கிராம காவல் தெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள காசி விசுவநாதா் சமேத விசாலாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணி சிறக்க வேண்டியும் விளக்கேற்றி வழிபட்டனா்.
இதேபோன்று, சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில், நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகியம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயில், காளையாா்கோவிலில் உள்ள சொா்ண காளீஸ்வரா் சமேத சொா்ண வல்லி அம்மன் கோயில் மற்றும் பூவந்தி, மதகுபட்டி, சிங்கம்புணரி, இளையான்குடி, திருப்புவனம், சாலைக்கிராமம் ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலயங்கள், பெருமாள் கோயில்கள், காவல் தெய்வங்களான கருப்பா், அய்யனாா், அம்மன், முனியாண்டி ஆகிய கிராமக் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

