கமுதி அருகே பாதுகாப்பு கோரி, காவல் நிலையத்தில், புதுமணத் தம்பதி, புதன்கிழமை தஞ்சம் புகுந்தனர்.
அபிராமம் காவல் நிலைய சரகம் முத்து விஜயபுரத்தைச் சேர்ந்தவர் உடையார் மகன் பன்னீர் செல்வம் (33).
இவருக்கும் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய சரகம் சுவாத்தானைச் சேர்ந்த சேதுராஜா மகள் லட்சுமி பிரியா (23)வுக்கும் கடந்த மாதம் திருமணம் குறித்து பேசப்பட்டதாம்.
இதையொட்டி லட்சுமி பிரியாவை பெண் பார்க்க பன்னீர் செல்வம் வந்திருந்தபோது இருவரும் திருமணத்துக்கு சம்மதித்துள்ளனர். இதன் பின்பு இருவரும் செல் போனில் பேசிவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே பன்னீர் செல்வத்துக்கு பெண் தர விருப்பம் இல்லை என்று கூறி லட்சுமி பிரியாவுக்கு வேறொரு மாப்பிள்ளை பார்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பன்னீர் செல்வத்தை விரும்பிய லட்சுமி பிரியா
வீட்டைவிட்டு வெளியேறி, பன்னீர் செல்வம் வீட்டுக்கு வந்து விட்டாராம்.
புதன்கிழமை அபிராமம் கோவில் ஒன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று புதுமணத் தம்பதி இருவரும், அபிராமம் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார்கள். இதுகுறித்து சார்பு ஆய்வாளர் லட்சுமி விசாரணை நடத்தினார்.
பெண் வீட்டாரை அழைத்துப் பேசி சுமூகமான முடிவு எடுப்பதாக உறுதி அளித்து, லட்சுமி பிரியாவை, பன்னீர்செல்வத்துடன் அனுப்பி வைத்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

