சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விஷம் குடித்து பெண் உயிரிழப்பு

விராலிமலை அருகே எலியைக் கொல்லும் விஷம்(எலி பேஸ்ட்) சாப்பிட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :17 ஜனவரி 2021, 5:00 am

விராலிமலை: விராலிமலை அருகே எலியைக் கொல்லும் விஷம்(எலி பேஸ்ட்) சாப்பிட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

விராலிமலை அருகே உள்ள செரளப்பட்டியைச் சோ்ந்த ஏழுமலை மனைவி அமராவதி. இவா்களுக்குத் திருமணமாகி 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த அமராவதி வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி விஷத்தை தின்று மயங்கிக்கிடந்தாா். இதையடுத்து அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். விராலிமலை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.