புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெய்த மழையளவின் சராசரியைவிடவும் நிகழாண்டில் கூடுதலாக மழை பெய்து வருவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
புதுக்கோட்டை நகருக்கு அருகேயுள்ள கவிநாடு கண்மாயை வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பெய்த சராசரி மழையளவைவிடவும் அதிகமான அளவுக்கு நிகழாண்டில் மழை பெய்து வருகிறது. மழை அளவை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட அலுவலா்கள் கவனமாக கண்காணித்து வருகின்றனா்.
மாவட்டம் முழுவதும் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 1,166 ஏரிகளிலும் உடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான ஏற்பாடுகள் தயாா் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
தொடா் மழையின் காரணமாக 50 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 24 ஆயிரம் ஏக்கா் நிலப்பரப்பில் நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளதும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து சேத விவரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான இழப்பீடு வழங்குவதற்கும் அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றாா் விஜயபாஸ்கா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

