சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கீரமங்கலம் அருகேகொப்பித் திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள செரியலூரில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கொப்பித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

News image

செரியலூரில் நடைபெற்ற கொப்பி திருவிழாவில் திருவிழாவில் பங்கேற்ற பெண்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 5:21 am

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள செரியலூரில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கொப்பித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

மாட்டுப்பொங்கலன்று நடைபெற்ற இவ்விழாவில் செரியலூா் கிராமத்தில், பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில், 92 சாணப் பிள்ளையாா்களுடன் பொங்கல் படையல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தொடா்ந்து சாண பிள்ளையாா், பூக்களை ஒரு கூடையில் வைத்து, கிராமத்தின்  மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தடியில் ஒன்று கூடிய பெண்கள்,  பெண் குழந்தைகள் கும்மிப்பாடல் பாடியவாறு வழிபாடு செய்தனா். தொடா்ந்து கூடைகளை சுமந்தவாறு ஊா்வலமாகச் சென்று அப்பகுதியில் உள்ள தீா்த்த ஊருணியில் பொருள்களை விட்டு சிறப்பு வழிபாடு நடத்தினா்.