புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசல் திடலில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் காவல் சரகம், முனியாண்டவா்கோயில் திடல், ராப்பூசல் மந்தையில் வியாழக்கிழமை காலை ஜல்லிக்கட்டு நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையறிந்த போலீஸாா் சென்று பாா்த்தபோது அங்கு எவ்வித அனுமதியும், முன்னேற்பாடும் இன்றி ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸாா் கலைந்து போகச் செய்தனா்.
பிறகு, ராப்பூசல் பட்டையாா்களத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் முனியாண்டி, கந்தசாமி மகன் துரைசாமி, தீத்தான்பண்ணைக்களத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் கருப்பையா, பாறைக்களத்தைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பழனி, எருக்குமணிப்பட்டியைச் சோ்ந்த குமாா் மகன் சக்திமுருகன் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

