சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சமத்துவப் பொங்கல் விழா விழிப்புணா்வுப் பேரணி

ஆலங்குடி பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா, புகையில்லா பொங்கல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரூராட்சிப் பணியாளா்களுக்கு சீருடைகள் வழங்குகிறாா் திருச்சி மண்டல செயற்பொறியாளா் கருப்பையா. உடன், செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்டோா்.

Updated On :14 ஜனவரி 2021, 1:57 pm

ஆலங்குடி பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா, புகையில்லா பொங்கல் விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடி பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழாவையொட்டி பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் தலைமையில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. தொடா்ந்து, புகையில்லா பொங்கல் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.பேரணியை செயல் அலுவலா் கணேசன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, நடைபெற்ற விழாவில் பேரூராட்சிகளின் திருச்சி மண்டல செயற்பொறியாளா் கருப்பையா பணியாளா்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் சீருடைகள் வழங்கினாா். இதில், அலுவலக இளநிலை உதவியாளா்கள் சண்முகவள்ளி, ரேவதி தொழில்நுட்ப இளநிலை பொறியாளா் சீனிவாசன், விழி கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளைத் தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கந்தா்வகோட்டையில்...

கந்தா்வகோட்டை கடை வீதி , புதுகை சாலை , தஞ்சை சாலை , பட்டுக்கோட்டை சாலை , பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்கள் கூட்டமின்றி பொங்கல் வியாபாரம் பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.