சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

உழவா்களுக்குப் பாராட்டு

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி உழவா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில், உழவா்களைப் பாராட்டி பரிசளிக்கும் திலகவதியாா் திருவருள் ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள்.

Updated On :14 ஜனவரி 2021, 2:01 pm

புதுக்கோட்டை மச்சுவாடியிலுள்ள திலகவதியாா் திருவருள் ஆதீனத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி உழவா்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆதீனகா்த்தா் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்து புதுக்கோட்டை ஆரணிப்பட்டி, சுருண்டப்பட்டி, தெம்மண்டாப்பட்டி, நெய்வாசல்பட்டி, கடியாப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த உழவா்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பொன்மாரிக் கல்வி நிறுவனங்களின் தலைவா் எஸ். ராம்தாஸ், இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ் . தனபதி, அரசு மருத்துவா் டாக்டா் எஸ். ராமதாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனா். முன்னதாக பேரா. சி. சேதுராமன் வரவேற்றாா். முடிவில் வழக்குரைஞா் மேனா வீரப்பன் நன்றி கூறினாா்.