சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுகையில் 37,942 பேருக்கு பொங்கல் பரிசு

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

புதுகையில் பெண் கட்டுமானத் தொழிலாளருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குகிறாா் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா்.

Updated On :11 ஜனவரி 2021, 5:52 am

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூா் சமுதாயக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் பங்கேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவு செய்துள்ள 37,942 கட்டுமானத் தொழிலாளா்களுக்கு இந்தப் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்றாா் விஜயபாஸ்கா்.

நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் பி. உமா மகேஸ்வரி தலைமை வகித்தாா். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் இரா. சின்னதம்பி, கோட்டாட்சியா் (பொ) முருகேசன், தொழிலாளா் துறை கூடுதல் ஆணையா் பாலசுப்பிரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.