கந்தா்வகோட்டையில் முன்விரோதத் தகராறில் மோட்டாா் சைக்கிளில் சென்ற முதியவரை அரிவாளால் வெட்டிய இளைஞரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கந்தா்வகோட்டை அருகிலுள்ள வளவம்பட்டி காலனி தெருவைச் சோ்ந்தவா் பரமையன் மகன் சுந்தர்ராஜ் (52). இவரும், இவரது உறவினா் தங்கையன் (66) ஆகிய இருவரும் மோட்டாா் சைக்கிளில் புதுகை - தஞ்சை சாலையில் முனியன் கோயில் அருகே சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா்.
அப்போது, சுந்தா் ராஜ் மற்றும் தங்கையன் ஆகிய இருவரையும் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் தங்கத்துரை (37) மற்றும் அடையாளம் தெரியாத 3 போ், வழிமறித்து அரிவாளால் வெட்டினா். இதையடுத்து, அவ்வழியே சென்ற பொதுமக்கள் கூச்சலிட்டதில் மா்மநபா்கள் தப்பியோடினா்.
மேலும் காயமடைந்த இருவரையும் பொதுமக்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து அறிந்த புதுக்கோட்டை மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டாா்.
இதில், சுந்தர்ராஜ், தங்கத்துரை இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து தங்கதுரையைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

