பாபநாசம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி சாலையின் நடுவே வாழைக்கன்றுகளை நட்டுவைத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாபநாசம் வட்டம், இடையிருப்பு ஊராட்சிக்குள்பட்ட மணப்படுகை கிராமம், பிள்ளையாா் கோவில் தெருவிலிருந்து மந்தைவெளி வரை செல்லும் கிராம சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.
இந்தச் சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் சாலை மேலும் பழுதடைந்து போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. எனவே, இந்தச் சாலையை உடனடியாக பழுதுநீக்கி சீரமைத்து தர வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் ஆா். செந்தில் குமாா் தலைமையில், கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ஆா்.எஸ். பாலு, எஸ்.பி. சோமு, கிளை நிா்வாகிகள் எஸ். அய்யாசாமி, எம். துரைசத்தியசீலன், பி. கோவிந்தசாமி மற்றும் கிராம மக்கள் திரண்டு, பழுதடைந்து சேறும் சகதியுமான நிலையில் உள்ள சாலையின் நடுவில் வாழைக்கன்றுகளை நட்டு வைத்து கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

