புதுக்கோட்டை நகரிலுள்ள பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்பட வைக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி மற்றும் ஊடகப் பிரிவு கலந்தாய்வுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். நியாஸ் அகமது தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலா் கனல் உ. கண்ணன், மாநில இளைஞரணித் தலைவா் ஜெ. ஜோரோன்குமாா், மாவட்ட பொருளாளா் தமிமுல் அன்சாரி உள்ளிட்டோா் பேசினா்.
விவசாயிகள் விரோதச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு அரசுப் பணிகள் அனைத்திலும் 100 சதமும், தனியாா் பணிகளில் 90 சதமும் தமிழ்நாட்டில் வசிப்போருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

