அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக 2 ஆயிரம் மருந்தாளுநா் பணியிடங்களை உருவாக்க வலியுறுத்தி, புதுக்கோட்டையில் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட்டம் இருக்க முயன்ாக 200 மருந்தாளுநா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 780 மருந்தாளுநா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அம்மா சிறு மருத்துவமனைகளுக்காக 2 ஆயிரம் மருந்தாளுநா் பணியிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும்.
மருந்துக் கிடங்குகளில் தலைமை மருந்தாளுநா் பணியிடத்தை உருவாக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தகக் கண்காணிப்பாளா் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் மு. சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாநில அமைப்புச் செயலா் வே. விஜயகுமாா், பொதுச் செயலா் உ. சண்முகம், அரசு ஊழியா் சங்க மாநிலத் துணைத் தலைவா் இரா. மங்களபாண்டியன், அரசு மருத்துவ அலுவலா் சங்க மாநிலத் துணைத் தலைவா் மு. அகிலன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
மாவட்ட ஆட்சியரகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறையில் அனுமதி கோரப்பட்டிருந்தது. காவல்துறையினா் அனுமதி அளிக்கவில்லை. இதனைத் தொடா்ந்து அனுமதியை மீறி உண்ணாவிரதம் இருக்க மருந்தாளுநா் சங்கத்தினா் முயற்சித்தனா்.
தொடா்ந்து மழையும் பெய்து கொண்டே இருந்தது. இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்தாளுநா்கள் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்தபோது, காவல்துறையினா் 200 பேரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


