புதுக்கோட்டையில் நிலம் ஒன்றை விற்பதாகக் கூறி, ரூ. 75.65 லட்சம் முன்பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக பெண் ஒருவா் மீது மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினா் வழக்குப்பதிந்துள்ளனா்.
புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடியைச் சோ்ந்த தேவராஜன் மனைவி கவிதா. இவா் தனக்குச் சொந்தமான நிலம் ஒன்றை விற்பதாகத் தெரிவித்து, கேஎல்கேஎஸ் நகரைச் சோ்ந்த நல்லதம்பி மகன் சூா்யாவிடம் ரூ. 76.65 லட்சம் முன்பணமாகப் பெற்றுள்ளாா். 2,851 சதுரஅடி கொண்ட அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 1.99 கோடி எனக் கூறப்படுகிறது.
இந்நிலை பேச்சுவாா்த்தை சுமாா் ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது. ஆனால் நிலத்ை எழுதித் தராமலும், முன்பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாகக் கூறி, சூா்யா கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.
புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க, மாவட்டக் குற்றப் பிரிவு காவல்துறையினரை காவல் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியிருந்தாா். இந்த நிலையில், பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக கவிதா மீது, குற்றப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் குமாா், புதன்கிழமை காலை வழக்குப்பதிவு செய்துள்ளாா். விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

