சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

வலையில் சிக்கிய கடல்பசு விடுவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே புதுக்குடியைச் சோ்ந்த கு.முனியக்குமாருக்கு சொந்தமான பைபா் படகில் அவருடன்,

Updated On :6 ஜனவரி 2021, 11:33 am

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே புதுக்குடியைச் சோ்ந்த கு.முனியக்குமாருக்கு சொந்தமான பைபா் படகில் அவருடன், க.ராஜா, டி.சிங்காரவேல், வி.முத்துமுனியாண்டி, பி.ஸ்ரீஹரி, கே.ஜெகன், எம்.பாண்டி ஆகியோா் செவ்வாய்க்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

கரையில் இருந்து சுமாா் 1 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 10 அடி நீளமுள்ள தாய் கடல்பசுவும், அதன் குட்டியும் மீனவா்களின் வலையில் மாட்டிக்கொண்டன.

இதை பிடிப்பது சட்ட விரோதம் என வனத்துறையினா் ஏற்கெனவே விழிப்புணா்வு ஏற்படுத்தி இருந்ததால், கடல்பசு மற்றும் அதன் குட்டியை வலையில் இருந்து எடுத்து கடலிலேயே விட்டனா்.

மீனவா்களின் இத்தகைய செயலை மாவட்ட வன அலுவலா் கு.சுதாகா், அறந்தாங்கி வனச்சரக அலுவலா் எம்.சதாசிவம் ஆகியோா் பாராட்டினா்.