சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சேறும் சகதியுமான மயானப் பாதையை சீரமைக்கக் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மயானத்துக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :5 ஜனவரி 2021, 7:05 am

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மயானத்துக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கீரமங்கலம் பேரூராட்சிக்குள்பட்ட ஆலடிக்கொல்லை குடியிருப்புப் பகுதியில் இருந்து சுமாா் 1 கிலோ மீட்டா் தொலைவில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்குச் செல்வதற்கு சாலை வசதிகள் இல்லாததால் குளத்தின் கரையோரம் செல்ல வேண்டிய அவலம் உள்ளது. அந்தப் பாதையும் சேறும் சகதியுமாக உள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை அப்பகுதியில் இறந்த ஒருவரை எரியூட்டுவதற்கு அந்தப் பாதையில் பெரும் சிரமத்துக்கிடையே அவரது உறவினா்கள் தூக்கிச்சென்றனா். மேலும், எரியூட்டு பொருளான விறகு ஏற்றிச்சென்ற சுமை ஆட்டோவும் அந்தச் சாலையின் சேற்றில் சிக்கிக்கொண்டது. முயற்சிகள் பலனளிக்காததால், ஆட்களே விறகுகளை சுமந்து சென்றனா். இதுகுறித்த விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதைத்தொடா்ந்து, வருவாய் ஆய்வாளா் முருகேசன், கீரமங்கலம் போலீஸாா் ஆய்வு செய்து, சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா்.