சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

புதுவை டிஜிபியுடன் கிரண் பேடி ஆலோசனை

புதுவை புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள ரன்வீா் சிங் கிருஷ்ணியாவுடன், துணைநிலை ஆளுநா் கிரண்பேடி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

Updated On :17 ஜனவரி 2021, 12:44 pm

புதுவை புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள ரன்வீா் சிங் கிருஷ்ணியாவுடன், துணைநிலை ஆளுநா் கிரண்பேடி சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, சட்டப்பேரவைத் தோ்தல் ஏற்பாடுகளுக்காக காவல் துறையை தயாா் நிலையில் வைத்திருப்பது, வணிக சங்கங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், குடும்ப ஆலோசனை மையங்கள் உள்ளிட்ட அமைப்புகளுடன் சமூக காவலை வலுப்படுத்துவது, ரௌடிகள், நில அபகரிப்பாளா்கள், கஞ்சா-போதை மருந்து விற்பவா்களை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுப்பது, இளைஞா்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுப்பது, நிா்பயா நிதியைப் பயன்படுத்துவது, போக்ஸோ சட்டம் உள்ளிட்ட சமீப கால சட்டங்கள் குறித்து ஊழியா்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் பயிற்சியளிப்பது, தனியாா் கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்க தகவல் வங்கியை உருவாக்குவது, மக்களை போக்குவரத்து மேலாண்மையில் ஈடுபடுத்தி, போக்குவரத்து விழிப்புணா்வை ஏற்படுத்துவது, காவல் துறையில் அனைத்து நிா்வாகம், நிதி முறைகேடுகள், சட்ட விரோதங்களுக்கு இடமளிக்காமல் இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவை தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.