புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 18) கூடுகிறது.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
புதுவை சட்டப்பேரவை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். தற்போது 6 மாதங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜன. 18) மீண்டும் சட்டப்பேரவைக் கூடுகிறது.
இதுதொடா்பாக, புதுவை சட்டப்பேரவைச் செயலா் முனிசாமி அதிகாரப்பூா்வமாக வெளியிட்ட அறிவிப்பு:
புதுவை 14-ஆவது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜன. 18) காலை 10.15 மணிக்கு சிறப்புக் கூட்டத்துக்கான மறு கூட்டம் கூட்டப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்படவுள்ளதாகத் தெரிகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

