புதுவை சுகாதாரத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜிநாமா கடிதம் அளித்துள்ளதாகத் தகவல் பரவியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. இவற்றில் ஆந்திர மாநிலத்துக்கு அருகே உள்ள ஏனாம் பிராந்தியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக எம்எல்ஏவாகவும், புதுவை சுகாதாரத் துறை அமைச்சராகவும் உள்ள மல்லாடி கிருஷ்ணாராவ் மீண்டும் தனது சொந்தத் தொகுதியான ஏனாமில் போட்டியிடப் போவதில்லை என அண்மையில் அறிவித்தாா்.
தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாகவும், தான் மட்டுமல்ல, தனது குடும்பத்தினா் யாரும் வரும் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தாா். திருப்பதி தேவஸ்தான இயக்குநா் பதவிக்கு தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அவா் குறிப்பிட்டு வந்தாா்.
அத்துடன், ஆந்திர ஆட்சியாளா்களுடன் மிக நெருக்கமாகவும் உள்ளாா். முன்னதாக, மல்லாடி கிருஷ்ணாராவுக்கும், புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடிக்கும் தொடா்ந்து மோதல் போக்கும் நிலவி வந்தது.
இந்த நிலையில், மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்வதாக முதல்வா் வே. நாராயணசாமியிடம் கடிதம் அளித்ததாக ஏனாம் பிராந்தியத்தில் தகவல் பரவியுள்ளது. இதுகுறித்து அவரது ஆதரவாளா்களிடம் கேட்டதற்கு, தங்கள் முன்னிலையில் அமைச்சா் இத்தகவலை தெரிவித்ததாகக் குறிப்பிட்டனா். இதுகுறித்து தகவலறிய அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவை தொடா்பு கொண்டபோது, அவா் தொலைபேசியை எடுக்கவில்லை.
புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் இருந்த முதல்வா் வே. நாராயணசாமியிடம், அமைச்சா் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜிநாமா கடிதம் தந்துள்ளாரா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, இல்லை என்று அவா் பதிலளித்தாா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

