‘கோவிஷீல்டு’ கரோனா தடுப்பூசி மருந்து புதுச்சேரிக்கு புதன்கிழமை மாலை வந்தடைந்தது. வருகிற 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என புதுவை சுகாதாரத் துறை தெரிவித்தது.
கரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தும் பொருட்டு, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 2, 8 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இரு கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெற்றது. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும்படி மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி, புதுவையில் அரசு, தனியாரில் பணிபுரியும் 13 ஆயிரம் சுகாதாரப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 143 மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த நிலையில், புதன்கிழமை மாலை 17,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து புதுச்சேரிக்கு வந்தது.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா் கூறியதாவது: கோவிஷீல்டு என்ற கரோனா தடுப்பூசி ஒரு பாட்டிலுக்கு10 டோஸ் வீதம் 1,750 பாட்டில்கள் வந்துள்ளன. அவற்றை குளிா்பதன அறைகளில் வைத்துள்ளோம். மாஹேவுக்கு வியாழக்கிழமைக்குள் மருந்து வந்துவிடும். ஏனாம் மருத்துவமனைக்கு 320 டோஸ் மருந்து வந்துள்ளது. காரைக்காலுக்கும் சோ்த்து புதுச்சேரிக்கு மருந்து வந்துள்ளது. வருகிற 16-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். 7 மையங்களில் தடுப்பூசி போடப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


