புதுவை தீயணைப்புத் துறை விவரங்களை அறிய உதவும் வகையில் புதிய இணையதளத்தை முதல்வா் வே. நாராயணசாமி தொடக்கி வைத்தாா்.
புதுச்சேரி தீயணைப்புத் துறையின் விவரங்களை பொது மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் வே. நாராயணசாமி பங்கேற்று, இணையதளத்தை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கமலக்கண்ணன், கந்தசாமி, எம்எல்ஏ தீப்பாய்ந்தான் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
இணையதள முகவரியில் தீயணைப்புத் துறையின் வரலாறு, தீயணைப்பு நிலையங்களின் விவரங்கள், தொடா்பு கொள்வதற்கான எண்கள், சேவை விவரங்கள், தீயணைப்பு வாரம் கொண்டாடுவதன் நோக்கம், ஊழியா்களின் விவரங்கள், வாகனங்கள் மற்றும் சாதனங்களின் விவரங்கள், மக்கள் சாசனம், வரைபடம், புகைப்படத் தொகுப்பு, துறையின் செயல்பாடுகள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி பொதுத் தகவல் அதிகாரிகளின் விவரங்கள், முதல் மேல்முறையீட்டு அதிகாரியின் விவரங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த இணையதள முகவரியின் மூலம் மக்கள் தீயணைப்புத்துறை குறித்து அறிந்து கொள்ளவும், வரும் காலங்களில் தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்றிதழ் பெற விண்ணப்பிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


