புதுச்சேரி பாவேந்தா் கலை, இலக்கிய அன்பா்கள் சாா்பில் பொங்கல் சந்திப்பு மற்றும் கலை, இலக்கிய விழா புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், ‘குணக்குன்று பாரதி’ என்ற தலைப்பில் சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. இதில், 35 கவிஞா்கள் பங்கேற்று, கவிதை வாசித்தனா். பாவலா் சீனு. மோகன்தாசு தலைமையில் உலகம் உன்னுடையது என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. பொங்கல் சிந்தனைகள் என்ற தலைப்பில் கலக்கல் காங்கேயன் தனி உரை நிகழ்த்தினாா்.
புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவா் வி. முத்து தலைமையில் பாராட்டரங்கம் நடைபெற்றது. இதில், பாரதிதாசன் அறக்கட்டளையின் தலைவா் கோ. பாரதி, பாரதிதாசனின் மகன் மன்னா் மன்னன் பெயரிலான விருதுகளை வழங்கி பாராட்டி பேசினாா். தமிழறிஞா் ராச. வேங்கடேசன், சுடுமண் கலைஞா் வி.கே. முனுசாமி, நல்லாசிரியா் லூசியன் தேவராஜ் ஆகியோா் விருதுகளைப் பெற்றுக் கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

