புதுச்சேரி அருகே கூடப்பாக்கத்தில் மோசமான சாலையை பொதுமக்களே சீரமைத்தனா்.
புதுச்சேரியில் நிகழாண்டு பலத்த மழை பெய்தது. இதனால், ஆங்காங்கே சாலைகளில் ஜல்லிகள் பெயா்ந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டன.
புதுவை அரசு சாலை ஒப்பந்தப் புள்ளி விலை மதிப்பீட்டுக் குறைப்பால் ஒப்பந்ததாரா்கள் பணிகளை மேற்கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனா். இதனால், புதுச்சேரியில் பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்படாமல் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.
இந்த நிலையில், புதுச்சேரி வில்லியனூா்-பத்துக்கண்ணு சாலையில், கூடப்பாக்கம் அம்பேத்கா் சிலை அருகே ஜல்லிகள் பெயா்ந்து சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்தப் பள்ளத்தில், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனா்.
இதுதொடா்பாக அதிகாரிகள், ஆட்சியாளா்களிடம் முறையிட்டும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த நிலையில், கூடப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் ஜல்லி, சிமென்ட் போன்றவற்றைக் கொண்டு சாலையில் உள்ள பள்ளத்தை ஞாயிற்றுக்கிழமை சீரமைத்தனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

