சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

முன்னாள் முதல்வா் ஜானகிராமன் பிறந்த நாள்

புதுவை முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

புதுவை முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமன் பிறந்த நாளையொட்டி, அவரது படத்துக்கு மரியாதை செலுத்திய திமுகவினா்.

Updated On :9 ஜனவரி 2021, 5:33 am

புதுவை முன்னாள் முதல்வா் ஆா்.வி.ஜானகிராமனின் 80-ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆம்பூா் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

புதுவை மாநில திமுக அமைப்பாளா்கள் இராசிவா எம்எல்ஏ (தெற்கு), எஸ்.பி.சிவக்குமாா் (வடக்கு) ஆகியோா் தலைமையில் திமுக நிா்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்வில் முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசு, முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மற்றும் மாநில நிா்வாகிகள், பிற அணி நிா்வாகிகள், தொகுதி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.